நோயாளிகளுக்கு தொந்தரவு! மருத்துவமனையில் படப்பிடிப்பு! நடிகர் பகத் பாசில் மீது வழக்குபதிவு! - Seithipunal
Seithipunal


மருத்துவமனையில் படப்பிடிப்பு நடத்திய நடிகர் பகத் பாசில் மீது கேரளா மனித உரிமைகள் ஆணையம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், மாமன்னன், விக்ரம் ஆகிய படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் மலையாள நடிகர் பகத் பாசில். பகத் பாசில் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது பிங்க்கேலி என்ற படத்தில் நடித்து தயாரித்து வருகிறார்.

அந்தப் படத்திற்கான படப்பிடிப்பு எர்ணாகுளத்தில் உள்ள அங்கமாளி அரசு மருத்துவமனையில் நடத்தினார். இரவு முழுவதும் படப்பிடிப்பு நடத்தியதால் அங்குள்ள நோயாளிகள் மிகவும் அவதிப்பட்டனர். எமர்ஜென்சி அறையில் படப்பிடிப்பு நடத்தியதால் உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை.

மருத்துவமனையில் சிகிச்சை நடந்தபோது மற்றொருபுறம் படப்பிடிப்பும் நடத்தினார்கள். இதனால் நோயாளிகள் மிகவும் அவதிப்பட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளிகளை எமர்ஜென்சி வார்டுக்குள் செல்ல விடாமல் தடுத்தார்கள் என்று பல நோயாளிகள் புகார் கூறியுள்ளார்கள்.

இதனை எடுத்து கேரளா மனித உரிமைகள் ஆணையம் நடிகர் பகத் பாசில் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இதனால் அவர் விரைவில் விசாரணைக்கு அழைக்கபடுவார் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Human Rights Commission registers a case against actor Bhagat Basil


கருத்துக் கணிப்பு

இந்தியா இரண்டாவது முறையாக டி-20 உலக கோப்பையை வென்றதற்கு காரணம்?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா இரண்டாவது முறையாக டி-20 உலக கோப்பையை வென்றதற்கு காரணம்?




Seithipunal
--> -->