பிரபல திரைப்பட இயக்குநர் திடீர் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம், திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் சுதீர் போஸ் என்பவர் உடல்நல குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மலையாளத் திரைப்பட இயக்குனர் சுதீர் போஸ் முதன் முதலாக பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஜெஸ்சி மற்றும் பிஜி விஸ்வம்பரன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். இதன் பின்னர் பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

சுதீர் போஸ் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் முறையாக 'கபடி கபடி' என்ற திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படத்தில் நடிகர் கலாபவன் மணி, முகேஷ், ரம்பா ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தின் மூலம் தான் சுதீர் போஸ் இயக்குனரானார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்த படத்திற்கு நாதிர்ஷா இசையமைத்திருந்தார். இப்படத்தில் வரும் 'மின்னாமினுங்கே' என்ற பாடலை இப்படத்தில் நடித்த கலாபவன் மணி பாடியிருந்தார். இந்தப் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாட்டினால் இந்த படமே சூப்பர் ஹிட் ஆனது. 

இவர் ப்ரீதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மிதுன், சவுபர்ணிகா என ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் பதிஞ்சரேனடா என்ற பகுதியில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வசித்து வந்தார். 

இதனிடையே தற்போது, சுதீர் போஸ் திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

சுதீர் போசின் இறப்பு குறித்து மலையாள நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவரின், இறுதிச்சடங்கு வருகின்ற 5-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Cinema Director Sutheesh death


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->