விடிய விடிய நடந்த சோதனை - காரைக்காலில் அரசு அதிகாரிகள் கைது.!
three officers arrest in karaikkal after cbi raide
சிபிஐ அதிகாரிகள் காரைக்காலில் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விடிய விடிய சிபிஐ விசாரணை நடத்தினர்.
காரைக்கால் பொதுப்பணித்துறையில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி புதுச்சேரி தலைமை பொறியாளர் தீனதயாளன், காரைக்கால் சாலை மற்றும் கட்டட செயற்பொறியாளர் சிதம்பரநாதன் உள்பட 3 பேரை கைது செய்தனர்.

மேலும், சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து சிபிஐ அதிகாரிகள் மூட்டை மூட்டையாக ஆவணங்களை பறிமுதல் செய்தனர். மேலும், ரூ.7 கோடி ஒப்பந்தத்திற்கு பல லட்சம் கமிஷன் பெற்றதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
அரசு தங்கும் விடுதியில் விடிய விடிய விசாரணை நடைபெற்றதைத் தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
three officers arrest in karaikkal after cbi raide