மும்முனை போட்டி இருமுனை போட்டியானது! திரிபாதியின் வேட்பு மனு நிராகரிப்பு! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவருக்கான தேர்தலில் விறுவிறுப்பு!

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவருக்கான தேர்தல் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி நடைபெற உள்ளது இந்த தேர்தலில் சோனியா காந்தி குடும்பத்தைச் சேர்ந்த யாரும் போட்டியிடவில்லை என அறிவித்து விட்டனர். அதன்பின்பு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ராஜஸ்தான் மாநில முதல்வருமான அசோக் கெலாட் முதன் முதலில் போட்டியிடுவதாக அறிவித்தார்.

 பின்னர் ராஜஸ்தான் அரசியலில் ஏற்பட்ட பெரும் குழபத்தினால் தான் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என முடிவு செய்து பின் வாங்கினார். அதன் பிறகு மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினர் திக்விஜய் சிங் போட்டியிடுவதாக அறிவித்தார். இன்னிலையில் மல்லிகார்ஜுன கார்கே போட்டியிடுவதால் அவருக்கு ஆதரவாக திக்விஜய் சிங் போட்டியிடுவதில்லை என அறிவித்து விட்டார்.

 காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர், ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கே.என் திரிபாதி ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் பதவிக்கு மும்முனை போட்டி நிகழும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக கே.என் திரிபாதி தாக்கல் செய்த மனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி மதுசூதன் மிஸ்திரி நிராகரித்தார். 

வேட்பு மனுவை விதிகளின்படி பூர்த்தி செய்யாததால் நிராகரிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மும்முனைப் போட்டியாக இருந்த காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் இருமுனை போட்டியாக மாறி உள்ளது. தற்பொழுது வேட்பு மனு ஏற்கப்பட்ட மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசிதரூர் இடையே நேரடி போட்டி உருவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Three way competition is two way competition Tripathis nomination rejected


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->