மூன்று ஆண்டு சிறை - பயணிகளுக்கு ரெயில்வே துறை எச்சரிக்கை.!
three years jail penalty to passengers for carry crackers
நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இந்த நிலையில் பலரும் அவர்கள் பணியாற்றி வரும் ஊர்களில் இருந்து பட்டாசுகளை வாங்கி சொந்த ஊருக்கு எடுத்து செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆனால், ரயிலில் பட்டாசுகளை எடுத்துச் செல்வதற்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுத் தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘’பட்டாசுகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களில் உள்ள ரசாயன கலவையானது ஒரு சிறிய தீப்பொறியால் கூட பற்ற வைக்கப்படலாம், இது ரயில்வே சொத்துகளுக்கு மட்டுமல்ல, பயணிகளின் உயிர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
ஆகவே, ரயில் பயணிகள் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம் என்று சென்னை ரயில்வே கோட்டம் கேட்டுக்கொள்கிறது. அதை மீறியும் எடுத்துச் செல்வது ரயில்வே சட்டம் 1989-ன் பிரிவு 67, 164 மற்றும் 165-ன் படி, ரயில்வேயில் எரியக்கூடிய மற்றும் வெடிபொருட்களை எடுத்துச் செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.
மேலும் ரூ. 1000/- அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும். அத்துடன் இழப்பு அல்லது காயம், இதனால் ஏற்படும் சேதம் உள்ளிட்டவற்றிற்கு பொறுப்பேற்க வேண்டும்.
ரயில், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தீவிர கண்காணிப்பில் மோப்ப நாயுடன் கூடிய சிறப்பு படையினரும், ரயில்வே பாதுகாப்பு படையினரும், ரயில்வே காவலர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்’’ என்று குறிப்பிட்டுள்ளது.
English Summary
three years jail penalty to passengers for carry crackers