திருப்பதி கோவிலில் கூட்ட நெரிசலால் பறிபோன உயிர்: கதறி துடிக்கும் புது மணப்பெண்ணின் பெற்றோர்! - Seithipunal
Seithipunal


ஆந்திரா, விஜயவாடா பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி சாய் சந்தோஷ் (வயது 21) இவருக்கும் ஹைதராபாத் பார்கவ் என்பவருக்கும் கடந்த 23ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. 

இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி லட்சுமி தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று தேவஸ்தானம் செல்வதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த போது கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. 

பின்னர் ஏழுமலையானை தரிசித்து விட்டு தங்க மண்டபம் அருகே புதுமண பெண் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார். 

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் அங்கு இருந்த அதிகாரிகள் உடனடியாக அவரை மீட்டு அவசர ஊர்தி மூலம் திருப்பதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் லட்சுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவரது பெற்றோர் தெரிவித்திருப்பதாவது, அவருக்கு சிறு வயதிலிருந்தே சுவாசக் கோளாறு இருந்ததாகவும் கூட்ட நெரிசலில் தரிசனத்திற்கு வந்ததால் மயங்கி விழுந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். 

இதனை அடுத்து போலீசார் லட்சுமி உடலை அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லட்சுமி அணிந்திருந்த தங்க நகைகள் காணாமல் போனதாக அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி புது மணப்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tirupathi temple heavy crowd bride girl death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->