திருப்பதி கோவிலில் செயல்பட்ட டீக்கடைக்கு சீல் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


திருப்பதி கோவிலில் செயல்பட்ட டீக்கடைக்கு சீல் - நடந்தது என்ன?

ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி மாவட்டத்தில் ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து  சாமி தரிசனம் செய்கின்றனர்.

அதனால், மிகவும் கட்டுக்கோப்பான முறையில் பராமரிக்கப்பட்டுவரும் இந்தக்கோயிலின் உள்ளே இந்து மதம் தவிர பிற மத அடையாளங்களை கொண்டு வருவதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடையை மீறியும் பிற மதம் சம்பந்தமான அடையாளங்கள் கோயிலின் உள்ளே நுழையும். அப்படி நுழைந்தால் அதற்கு தேவஸ்தானம் தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நிலையில், கோயில் தேவஸ்தானத்தில் செயல்படும் கடை ஒன்றின் மீது தற்போது தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதாவது, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அமைந்துள்ள டீக்கடை ஒன்றில் பக்தர்களுக்கு விநியோகிப்பட்ட பேப்பர் கப்பில், சிலுவை சின்னம் இருந்துள்ளது. இதையறிந்த தேவஸ்தான அதிகாரிகள் அந்தக்கடைக்கு சீல் வைத்திருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tirupati devastanam seal to tea shop in tirupati temple


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->