திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்காக கன்டெய்னர் ஓய்வறைகள்! - Seithipunal
Seithipunal


விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவர், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்போது தற்காலிகமாக தங்குவதற்கு கன்டெய்னர் வடிவிலான நடமாடும் 2 ஓய்வறைகளை காணிக்கையாக வழங்கியுள்ளார். 

திருமலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை பகுதியில் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. அது சோதனை அடிப்படையில் திருப்பதி தேவஸ்தான ஓட்டுனர்கள் இரவில் தங்குமிடமாக ஒதுக்கப்படடுள்ளது. 

மற்றொன்று, ராம்ப கீச்சா 3-வது விடுதி அருகே பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்கு வகையில் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் அறைகள் குறைவாக உள்ளதால் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு அதிக ஓய்வு இல்லங்கள் கட்ட அனுமதி இல்லை. 

இதனால் பல இடங்களில் உள்ள பழைய ஓய்வு இல்லங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. நடமாடக்கூடிய வடிவில் அமைக்கப்பட்டுள்ள கன்டெய்னர் தங்கும் ஓய்வறையில் ஒரே நேரத்தில் 12 பேர் தங்கும் வகையில் படுக்கைகள், குளியல் அறைகள் மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளன. 

அவை இரண்டின் மொத்தம் ரூ.25 லட்சம் ஆகும். திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்போது பல்வேறு இடங்களில் இந்த கன்டெய்னர் தங்கும் ஓய்வறை வைக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. மேலும் கன்டெய்னர் அறைகளை தயாரிக்க தேவஸ்தானம் முடிவு செய்யப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupati Eyumalayan Temple container Restrooms


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->