திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு இருப்பது உறுதியானது! அதிர்ச்சியில் பக்தர்கள்!
Tirupati Laddu Issue
திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு குறித்து தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது.
மீன் எண்ணெய், சோயாபீன், சூரியகாந்தி எண்ணெய் மற்றும் விலங்குகளின் கொழுப்புகளும் திருப்பதி லட்டில் இருந்ததாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் திருப்பதி லைட்டில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டதாக தற்போதைய ஆந்திர முதலவர் சந்திரபாபு கூறியிருந்தார்.
சந்திரபாபு நாயுடுவின் இந்த குற்றச்சாட்டை திருப்பதி முன்னாள் அறங்காவலர் தலைவர் சுப்பர் ரெட்டி மறுத்திருந்த நிலையில், ஆய்வின் முடிவில் லைட்டில் விலங்குகளின் கொழுப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.