கள்ளக்குறிச்சி விவகாரத்தில் நிர்மலா சீதாராமன் குற்றச் சாட்டுக்கு பதில் அளித்த செல்வப் பெருந்தகை..!! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த விஷ சாராயம் அருந்தியதில் 62 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தையே உலுக்கி உள்ள இந்த சம்பவத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று பாதிக்கப் பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும் போது, காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியினர் கள்ளக்குறிச்சி  சம்பவம் குறித்து எதுவும் கூறாதது அதிர்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில் இதற்கு பதிலளித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, "கள்ளச் சாராய சம்பவம் நிகழ்ந்த அன்றே காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் கார்கே ஆகியோர் என்னிடம் அது குறித்த தகவல்களை போன் மூலம் கேட்டறிந்தனர். 

மேலும் காங்கிரஸ் கட்சி சார்பில் கள்ளச் சாராயத்தால் உயிரிழந்த குடும்பங்களின் குழந்தைகளுடைய கல்விச் செலவை ஏற்க வேண்டும். தேவைப்படும் அனைத்து உதவிகளையும் அவர்களுக்கு செய்ய வேண்டும் என்றும் என்னிடம் தெரிவித்து இருந்தனர்.

தனது பொறுப்பை உணர்ந்து நமது நிதியமைச்சர் நடந்து கொள்ள வேண்டும். ராகுல் மற்றும் கார்கேயை குற்றம் சொல்லாமல், இனி இது போலொரு சம்பவம் நிகழாதிருக்க என்ன செய்ய வேண்டும் என்று தான் அறிவுரை கூற வேண்டுமே தவிர, இத்தனை உயிரிழப்பு ஏற்பட்டுள்ள சம்பவத்தை அரசியலாக்க கூடாது என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Congress Leader Selva Perunthagai Replied For Nirmala Seetharamans Allegation against Congress Leaders


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->