கேல் ரத்னா விருது பெற்றார் தமிழகத்தை டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல்! - Seithipunal
Seithipunal


மத்திய விளையாட்டு துறை சார்பாக ஆண்டு தோறும் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்படுவது வழக்கம். அதன்படி நட்பாண்டிற்கான கேல் ரத்தினா விருது, அர்ஜுனா விருது, துரோணாச்சாரியார் விருது உள்ளிட்ட விருதுகளை பெறுவோர்களின் விவரங்களை மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்டது.

அதன்படி விளையாட்டு துறையில் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு வழங்கப்பட்டது.

இவர் காமன்வெல்த் போட்டியில் மூன்று தங்கப்பதக்கம் உட்பட நான்கு பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். அதன் அடிப்படையில் சரத் கமலுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

அதேபோன்று தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்யானந்தா, இளவேனில் வாளறிவன், ஜெர்லின் அனிகா உள்ளிட்ட 25 வீரர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. இந்த விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று வழங்கினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN table tennis player sarathkamal received khelratna award


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->