சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்யும் அரசாக திமுக உள்ளது - சட்டசபையில் பிச்சு உதறிய ஸ்டாலின்..!
today assembly meeting chief minister stalin speech
இன்று சட்டசபை கூட்டத் தொடரில் விதி 110 -ன் கீழ் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-
"தமிழ்நாட்டை வளமான மற்றும் வலிமையான மாநிலமாகவும், அனைத்து துறைகளிலும் முன்னணி மாநிலமாகவும் மாற்ற அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக சமூக மேம்பாடு மற்றும் தனி மனித வளர்ச்சியில் கவனம் செலுத்தும் வகையில் நாள்தோறும் பல திட்டங்களை தீட்டி வருகிறோம். இந்தத் திட்டங்கள் அனைத்தும் அனைவரின் நலனை முன்னிறுத்தியே தீட்டப்படுகிறது.
இதுவரை நாங்கள் 3,337 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம். அந்த அறிவிப்புகளின் நிலை கண்காணிக்கப்பட்டு அதற்கான உரிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் 2,607 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளன. மீதமுள்ள அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடுவதற்கும், அரசாணை வெளியிட்டவற்றை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் தமிழகத்தில் தரமான கல்வியை அரசுப்பள்ளிகள் வழங்கி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 15 லட்சம் மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் புதிதாக சேர்ந்துள்ளனர். அம்மாணவர்களின் வசதிக்காக அரசுப்பள்ளிகளில் புதிதாக ஆயிரத்து 50 கோடி மதிப்பில் 7,200 வகுப்பறைகள் நடப்பு ஆண்டிலேயே கட்டப்பட்டு, அங்கு பாதுகாப்பான கற்றல் சூழல் உறுதி செய்யப்படும்.
இதையடுத்து, உள்ளாட்சி அமைப்புகளில் பழுதடைந்துள்ள அனைத்து சாலைகளையும் மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான சிறப்பு நிதியாக ரூ.2,200 கோடி வழங்கப்பட்டு 4,600 கி.மீ., நீளமுள்ள சாலைகள் நடப்பு ஆண்டிலேயே மேம்படுத்தப்படும். மேலும், ரூ.7,388 கோடி மதிப்பில் 16,390 கி.மீ., நீளமுள்ள சாலைகள் படிப்படியாக மேம்படுத்தப்படும்.
இதைத்தொடர்ந்து, அரசுப் பேருந்துகளில் 1.70 கோடி பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். அதிலும் 44 லட்சம் பெண் பயணிகள் சராசரியாக இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். இதனால், 2 ஆயிரம் கோடி அளவிலான பணம் மகளிருக்கு சேமிப்பாக மாறியுள்ளது. இதை அரசு வருமான இழப்பாக கருதவில்லை, மகளிருக்கான வளர்ச்சியாகவே பார்க்கிறோம்.
அதுமட்டுமல்லாமல், ரூ.500 கோடி மதிப்பில் 1,000 புதிய பேருந்துகளை வாங்க அரசு முடிவு எடுத்துள்ளது. நல்ல நிலையில் உள்ள 1,000 பழைய பேருந்துகளை புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2,013 டீசல் பேருந்துகள், 500 மின்சார பேருந்துகளை வாங்கிட நடவடிக்கை எடுத்து சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்யும் அரசாக திமுக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
today assembly meeting chief minister stalin speech