டெல்லியில் பாஜக செயற்குழு கூட்டம் - இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு.!
today bjp meeting in delhi
டெல்லி சட்டசபைக்கு கடந்த 2020-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 70 தொகுதிகளில் 62 இடங்களை வென்று ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்தது. பாஜக 8 இடங்களை வென்றது. காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து பா.ஜனதா கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறைக்கு சென்றது, பா.ஜனதாவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 7 நாடாளுமன்ற தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றதுடன் சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற திட்டம் வகுத்து வருகிறது.
டெல்லி சட்டசபைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தேர்தலை எதிர்கொள்வதற்கான வேலைகளை பாஜக இப்போதே ஆரம்பிக்க தொடங்கி விட்டது. இதன் ஒரு பகுதியாக கட்சியின் செயற்குழு கூட்டத்தை பாஜக இன்று நடத்துகிறது.
டெல்லி நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், வார்டு நிர்வாகிகள் உள்பட சுமார் இரண்டு ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் உரையாற்றவுள்ளார்.
இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகம் அமைப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படு்கிறது. மேலும், பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்படுகின்றன.
English Summary
today bjp meeting in delhi