நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்..!
today budget submit in parliment
குடியரசுத் தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், 2025-26ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. அதனை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தின் மக்களவையில் தாக்கல் செய்கிறார். நிதி அமைச்சராக அவர் தாக்கல் செய்யும் 8வது பட்ஜெட் இதுவாகும்.

இதேபோல், மத்தியில் பாஜக 3வது முறையாக ஆட்சியமைத்தபின் தாக்கல் செய்யப்படும் 2வது பட்ஜெட் இதுவாகும். கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்த பாஜக கடந்த ஜுலை மாதம் 23ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தது. தற்போது, 2வது முறையாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
அதன் படி இன்று தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் மாற்றம் உள்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
today budget submit in parliment