கர்நாடகா சட்டசபைத் தேர்தல் - இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு.!
today candidates list announce for karnataga assembly election
கர்நாடகா சட்டசபைத் தேர்தல் - இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு.!
கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணி கடந்த 13-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 3 ஆயிரத்து 632 வேட்பாளர்கள் 5 ஆயிரத்து 102 மனுக்களை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 21-ந் தேதி நடைபெற்றதில் மொத்தம் 678 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த மனுக்களை வாபஸ் பெற இன்றுடன் கடைசி நாள் ஆகும். இதற்கிடையே மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளில் சீட்டு கிடைக்காத பாஜக, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் சிலர் சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதனால் அந்தந்த கட்சிகளின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் போட்டி வேட்பாளர்களின் மனுக்களை திரும்ப பெற வைப்பதற்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். அதனால் இன்று அதிக எண்ணிக்கையில் வேட்பாளர்கள் தங்களின் மனுக்களை வாபஸ் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் அதிகாரப்பூர்வ இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட உள்ளது. இதில் எந்தெந்த தலைவர்களிடையே போட்டி ஏற்படும்? தொகுதிகளில் எத்தனை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்? என்பது போன்ற தகவல்கள் அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.
அதுமட்டுமல்லாமல், சுயேச்சை வேட்பாளர்களுக்கு இன்றைய தினமே சின்னங்களும் ஒதுக்கப்பட உள்ளன. இந்த இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு கர்நாடக சட்டசபை தேர்தல் களம் மிகவும் விறுவிறுப்பாகவும், போட்டியுடனும் தொடங்கும்.
English Summary
today candidates list announce for karnataga assembly election