கெஜ்ரிவால் ஜாமீன் தடைக்கு எதிரான மனு இன்று விசாரணை.!
today hearing kejriwal bail case in supreme court
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஜாமின் உத்தரவுக்கு தடை விதித்த டில்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
தலைநகர் டெல்லியில், மதுபான கொள்கை ஊழல் தொடர்பான பண மோசடி வழக்கில், மாநிலத்தின் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே கெஜ்ரிவாலுக்கு லோக்சபா தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக, ஜூன் 1 வரை இடைக்கால ஜாமின் வழங்கி, மே 10 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவின் படி கெஜ்ரிவால் ஜூன் 2 ஆம் தேதி திஹார் சிறையில் சரணடைந்தார்.
இதைத் தொடர்ந்து கெஜ்ரிவால் தரப்பில் ஜாமின் கோரி, டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில், மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை கடந்த 20 ஆம் தேதி விசாரணை செய்த நீதிமன்றம், அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்த டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுதிர் குமார் ஜெயின் தலைமையிலான விடுமுறை கால அமர்வு ஜூன் 21-ம் தேதி ஜாமின் உத்தரவுக்கு தடை விதித்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
English Summary
today hearing kejriwal bail case in supreme court