பொது பங்கு வெளியீட்டு முறை! எல்ஐசி பங்குகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.!
Today last date for the apply LIC shares
பொது பங்கு வெளியீடு முறையில் எல்ஐசி பங்குகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை இன்சுரன்ஸ் நிறுவனமான எல்ஐசியின் 3.5% பங்குகளை விற்பதன் மூலம் 21 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டுவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான பொது பங்கீட்டு முறை விண்ணப்பம் மே 4 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்று மே 9ஆம் தேதி முடிவடைகிறது. இதன் பின்னர் மே 17ஆம் தேதி எல்ஐசியின் பங்குகள் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் வெளியிடப்பட உள்ளன.
இதுவரையில் பாலிசிதாரர்கள் 4.94 மடங்கும், சிறு முதலீட்டாளர்கள் 1.55 மடங்கும், பணியாளர்கள் 3.74 மடங்கும் விண்ணப்பித்துள்ளனர். மேலும் பாலிசிதாரர்களுக்கு 2.21 கோடி பங்குகளும், பணியாளர்களுக்கு 1.58 கோடி பங்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த பங்குகள் பாலிசிதாரர்களுக்கு ரூபாய் 60 மற்றும் சில்லறை முதலீட்டாளர்களுக்கு ரூபாய் 45 தள்ளுபடியில் வழங்கப்படுகின்றது. எல்ஐசியின் ஒரு பங்கின் விலை உன் ரூபாய் 902 முதல் ரூபாய் 949 வரை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
English Summary
Today last date for the apply LIC shares