கர்நாடகா சட்டசபைத் தேர்தல் : இன்று முதல் வேட்பு மனுத் தாக்கல் ஆரம்பம்.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா சட்டசபைத் தேர்தல் : இன்று முதல் வேட்பு மனுத் தாக்கல் ஆரம்பம்.!

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதனால், ஆளும் பாஜக பதவியை தக்கவைத்து கொள்வதற்கும், எதிர் கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ளனர்.

இந்த தேர்தலை முன்னிட்டுஅரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல்களை வெளியிட்டுள்ளது. அதாவது  ஆளும் பாஜக 189 தொகுதிகளுக்கும், எதிர் கட்சியான காங்கிரஸ் 166 தொகுதிகளுக்கும், ஜனதா தளம் கட்சி 93 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. 

இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று முதல் ஆரம்பமாகிறது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வருகிற 20-ந்தேதி கடைசி நாள் ஆகும். அதன் மறுநாளே இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற உள்ளது. 

மேலும் 24-ந்தேதி வரை வேட்புமனுக்களை வாபஸ் (திரும்ப) பெற கடைசி நாள் ஆகும். அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வேட்பு மனித தாக்கல் செய்ய வரும் நபர் குறைந்தது நான்கு பேருடன் வருவதற்கு மட்டுமே அனுமதி.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today nomination file in karnataga for assembly election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->