பயங்கர கலவரத்திற்கு மத்தியில் மணிப்பூரில் நாளை பள்ளிகள் திறப்பு.! - Seithipunal
Seithipunal


பயங்கர கலவரத்திற்கு மத்தியில் மணிப்பூரில் நாளை பள்ளிகள் திறப்பு.!

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் மூன்றாம் தேதி இரு சமூகத்தினருக்கிடையே கலவரம் எழுந்தது. இந்தக் கலவரத்தில் சுமார் 100 பேர் பலியானார்கள். இருப்பினும், மாநிலத்தின் பல இடங்களில் தொடர்ந்து அடிக்கடி வன்முறை பரவி வருகிறது.

இதனால், மக்கள் அச்சத்துடன் வீட்டிலேயே உள்ளனர். இதற்கிடையே மாநிலத்தில் மோதலைத் தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்பட்டு வந்ததால் அதனைத் தடுக்க மே மாதம் 3-ம் தேதி இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டு அந்தத் தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டும் வருகிறது.

இந்த நிலையில், நேற்று மணிப்பூரில் முதலமைச்சர் பிரேன் சிங் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மணிப்பூர் மாநிலத்தின் பிரதான தொழிலாக இருக்கும் விவசாயம் மீண்டும் சீரான முறையில் நடைபெறுவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 

விவசாயிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும். விரைவில் மாநிலம் முழுவதும் இயல்புநிலைகுத் திரும்ப வேண்டும். வன்முறை குழுக்கள் உருவாக்கியுள்ள பதுங்கு குழிகள் அழிக்கப்பட வேண்டும். மேலும், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் வரும் புதன்கிழமை முதல் இயங்கும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tomarrow school open in manipur


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->