தமிழகத்தை தொடர்ந்து புதுவையில் அதிகரிக்கும் தக்காளி விலை - கிலோ எவ்வளவு? - Seithipunal
Seithipunal


தமிழகத்தை தொடர்ந்து புதுவையில் அதிகரிக்கும் தக்காளி விலை - கிலோ எவ்வளவு?

புதுச்சேரி மாநிலத்திற்கு கர்நாடகம் மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்து தக்காளி இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த இரண்டு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தக்காளியின் விளைச்சல் மிக அதிகமாக இருந்தது. இதனால் விலை வீழ்ச்சி அடைந்தது. 

இந்த விலை வீழ்ச்சியினால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த தக்காளியை சாலைகளில் கொட்டி சென்ற அவல நிலை ஏற்பட்டு விவசாயிகள் தக்காளி விளைவிப்பதில் ஆர்வம் காட்டாமலேயே இருந்து வந்தனர். 

அதுமட்டுமல்லாமல், அதிக வெயில் காரணமாகவும் தாக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால், கர்நாடகா மற்றம் ஆந்திர மாநிலங்களில் இந்த ஆண்டு தக்காளி விளைச்சல் குறைவாக இருந்தது. 

மேலும், இந்த இரண்டு மாநிலங்களில் இருந்து புதுவைக்கு வரக்கூடிய தக்காளியின் அளவும் குறைந்தது. அதாவது, ஒரு நாளைக்கு 30 டன் தக்காளி புதுவைக்கு இறக்குமதி செய்யப்படும். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அது இருபது டன்னாக குறைந்தது. 

இந்த நிலையில், புதுச்சேரியில் தக்காளி விலை மொத்த விற்பனை கடைகளில் ரூ 90 ஆகவும், நகரப்பகுதி மற்றும் கிராமப் பகுதிகளில் ரூ.100 -க்கும், சில கடைகளில் ரூ120 க்கும் விற்பனையானது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில், தக்காளி விலை அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது, புதுச்சேரியிலும் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tomatto price increase in puthuchery


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->