பிரியாவிடை விழாவில் ஏற்பட்ட சோகம் ...நடனமாடிக்கொண்டிருந்த காவல் அதிகாரி திடீரென சரிந்து மரணம்! - Seithipunal
Seithipunal


டெல்லி காவல்துறையில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்த ரவிக்குமார், நேற்று முன்தினம் சக ஊழியரின் பிரியாவிடை விருந்தில் கலந்து கொண்டு மகிழ்ச்சியில் நடனம் ஆடிக்கொண்டிருந்தபோது, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு கீழே விழுந்தார்.

இதையடுத்து ரவிக்குமார்  உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையேயே ரவிக்குமாரின் இறுதித் தருணங்கள் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ள நிலையில், அதில் அவரும் மற்றொரு நபரும் பாடல் ஒன்றுக்கு காலை அசைத்தபடி நடனம் ஆடுவதும், சிறிது நேரத்தில்  ரவி சிரித்துக்கொண்டே ஒதுங்குவதும், இடம் பெற்றுள்ள நிலையில், பின்னர்அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

உயிரிழந்த ரவிக்குமாருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர் 2010-ம் ஆண்டு முதல் டெல்லி போலீஸ் படையில் சேர்ந்து பணியாற்றி வருகிறார். 45 நாட்களுக்கு முன்புதான் அவருக்கு ஆஞ்சியோகிராபி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபரில், கடந்த 24 மணி நேரத்தில் குஜராத் முழுவதும் கர்பா நிகழ்வுகளில் குறைந்தது 10 மாரடைப்பு இறப்புகள் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tragedy at the farewell ceremony a police officer who was dancing suddenly collapsed and died


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->