சிம் கார்டுகளுக்கு கட்டணம் என்ற செய்தி தவறானது - TRAI விளக்கம்..!!
TRAI Explained The information About Charge For SIM Card Is Not True
மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI, மொபைல் எண்களுக்கும், லேண்ட்லைன் எங்களுக்கும்உபயோகத்திற்கு செலுத்தும் கட்டணம் மட்டும் அல்லாமல், எண்களுக்கு மட்டுமே தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என்ற விதியை அமல்படுத்தி உள்ளதாக செய்திகள் வெளியானது. இதன்படி இனி நாம் ஒவ்வொருவரும் பயன்படுத்தும் மொபைல் சிம் கார்டுகள் மற்றும் லேண்ட்லைன் நம்பர்கள் அனைத்திற்கும் கட்டணம் செலுத்த வேண்டும்.
அந்த கட்டணத்தை வருடத்திற்கு ஒருமுறை வருடாந்திரக் கட்டணமாகவோ, அல்லது பிரீமியம் எண்களுக்கான ஏலம் விடுவது போன்ற முறையிலோ இந்த கட்டணம் செலுத்தும் நடைமுறை இருக்கலாம் என்று கூறப்பட்டது. இதையடுத்து இந்த கட்டணங்கள் நாம் உபயோகப் படுத்தும் எண்களின் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மூலமாக வசூலிக்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இதுகுறித்து TRAI நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவிட்டு உள்ளது. அதில் ஒரு சிம் கார்டோ அல்லது பல சிம் கார்டுகளோ வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு TRAI கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த உள்ளது என்ற தகவல் தவறானது.
இது போன்ற தகவல்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களை தவறாக வழி நடத்தும். எனவே இது போன்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். இவை வெறும் வதந்திகள் மட்டும் தான். TRAI எந்த கட்டண நடைமுறையையும் அமல்படுத்தவில்லை " என்று TRAI நிறுவனம் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது.
English Summary
TRAI Explained The information About Charge For SIM Card Is Not True