நடுவழியில் கழன்று ஓடிய ரயில் என்ஜின் - பயணிகளின் கதி என்ன? - Seithipunal
Seithipunal


நடுவழியில் கழன்று ஓடிய ரயில் என்ஜின் - பயணிகளின் கதி என்ன?

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை போரிவிலியில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் நோக்கி பகல் 1.30 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுச் சென்றது. இந்த ரயில் விராரை அடுத்த வைத்தர்ணா ரயில் நிலையம் அருகே வந்தப்போது திடீரென ரயில் என்ஜின் தனியாக கழன்று ஓடியது. 

ரெயில் இன்ஜினுக்கும் ரயில் பெட்டிக்கும் இடையே உள்ள இணைப்பு துண்டிக்கப்பட்ட போது டமார் என்ற சத்தம் கேட்டது. இதனால் ரெயிலில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து கத்திக் கூச்சலிட்டனர். 

பெட்டியை விட்டு கழன்று ஓடிய இன்ஜினை சிறிது நேரம் கழித்து ஓட்டுநர் நிறுத்தினார். இதேபோல், ரயில் பெட்டிகள் சிறிது நேரம் ஓடியபடி நின்றது. இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 

பின்னர் அவர்கள் ரயில் பெட்டிகளை மீண்டும் பிணைத்து சரி செய்தனர். இதையடுத்து ரயில் அங்கிருந்து தாமதமாக புறப்பட்டு அகமதாபாத் நோக்கி சென்றது. பயணிகளை பதற்றத்துக்கு உள்ளாக்கிய இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

train engine ran without boxes in uttar pradesh


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->