'லிவிங் டுகெதரில்' 2 திருநங்கைகள்... செங்கல்லால் அடித்து... காவல்துறை விசாரணை.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் லிவ்வின் உறவில் வாழ்ந்து வந்த இரண்டு திருநங்கைகளுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் திருநங்கை ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் உள்ள பிவண்டி என்ற இடத்தில்  இரண்டு திருநங்கைகள் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து திருமணம் செய்து கொள்ளாமலே லிவ்விங் டுகதர் முறையில் வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

நேற்று மாலை அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக வாக்குவாதம் நடைபெற்றதாக தெரிகிறது. இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த திருநங்கை ஒருவர் செங்கல்லை எடுத்து மற்றொரு திருநங்கையின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் மயங்கி விழுந்த அந்த திருநங்கை மரணம் அடைந்திருக்கிறார்.

தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த திருநங்கையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  மேலும் அவரை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மற்றொரு திருநங்கையை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

transgender murdered in living together life tyle poice searchijg for murderer


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->