2 பெண்களை காதலித்த இளைஞர்..2வது காதலியால் காதலனுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்.! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் தற்கொலைக்கு முயன்ற இரண்டாவது காதலியை காப்பாற்ற சென்ற காதலன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, சில நாட்கள் இந்தியாவில் தங்கலாம் என்ற எண்ணத்தில் நாடு திரும்பியுள்ளார். இந்தியாவிற்கு வந்த இளைஞர் சமூக வலைதளங்கள் மூலமாக ஏற்கனவே தொடர்பில் இருந்த இரண்டு பெண்களுடன் மீண்டும் தனது நட்பை ஆரம்பித்துள்ளார்.

இதில், முதலாவதாக ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில், இரண்டாவது பெண்ணையும் காதலித்துள்ளார். ஒரு கட்டத்தில் இரண்டு பெண்களுக்கும் இந்த விஷயம் தெரியவந்துள்ள நிலையில் அவர்கள் இருவரும் அந்த இளைஞரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

எனவே, அந்த இரண்டு பெண்களையும் சமாதானப்படுத்துவதறகாக சோமேஷ்வரா பீச்சிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில் இரண்டு பெண்களில் ஒருவர் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் அவரை காப்பாற்றுவதற்காக அந்த இளைஞரும் கடலில் குளித்துள்ளார்.

இதில், அந்தப் பெண்ணை காப்பாற்றி கரை சேர்த்து விட்டார். ஆனால், அந்த இளைஞரால் வெளியே வர முடியவில்லை. நீரோட்டம் அவரை உள்ளே இழுத்துச் சென்றுள்ளது. அதன்பிறகு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில் அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Triangle love in Karnataka young man


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->