மேற்கு வங்கத்தில் கவுன்சிலர் சுட்டுக்கொலை! கவல்துறை விசாரணை.! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்கத்தில் திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் கவுண்சிலர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பனிஹதி நகராட்சி உள்ளது. இந்த நகராட்சியின் 8 வது வார்டு கவுன்சிலர் அனுபம் தத்தா இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவ்ல்துறை தெரிவித்துள்ளது.

பராக்பூர் காவல்நிலையம் சார்பில், கவுன்சிலர் அனுபம் தத்தாவின் துப்பாக்கி தோட்டா இருந்ததாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், கொலையாளிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trinamul Congress councilor murder


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->