சேலம் தொப்பூர் கணவாய் பகுதியில் இரண்டு லாரிகள் கவிழ்ந்து விபத்து.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம், அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார். இவர் ஆந்திராவில் இருந்து சேலம் மாவட்டம் வாழப்பாடிக்கு லாரியில் சிமெண்ட் கிண்டர்கல் பாரம் ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தார். 

அப்போது தருமபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் பகுதி அருகே லாரி வந்த போது முன்னால் சென்ற டீசல் டேங்கர் லாரியின் மீது மோதியதில் இரண்டு லாரிகளும் அங்குள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் இரண்டு லாரி ஓட்டுனர்களும் உடன் வந்தவர்களும் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்தில் படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதன் பின்னர், காவல்துறையினர் விபத்துக்குள்ளான லாரிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்தினால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

trucks accident in Salem Toppur Pass


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->