நம்பிய பெண்களை ஏமாற்றிய கட்சி இதுதான்... அமைச்சர் குற்றச்சாட்டு! - Seithipunal
Seithipunal


மகளிர் நலன் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, சத்தீஸ்கர் மக்கள் காங்கிரஸ் கட்சியை நம்பினார்கள் என்றும் ஆனால் காங்கிரஸ் கட்சி அவர்களை ஏமாற்றி விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். 

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் அரசு மதுபானங்களை தடை செய்யப்படும் என் அறிவிப்பு இருந்தது. ஆனால் தற்போது வரை காங்கிரஸ் கட்சி அதனை செய்யவில்லை என விமர்சித்தார். 

சத்தீஸ்கரில் தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாரதிய ஜனதாவை ஆதரித்து அமைச்சர் ஸ்மிருதி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். 

அப்போது அவர் பேசியிருப்பதாவது, ''சத்தீஸ்கர் மாநில மகளிரை பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஏமாற்றி வருகிறது. 

காங்கிரஸ் கட்சி மதுபானத்தை தடை செய்வதாக உறுதியளித்திருந்தது. காங்கிரஸ், மாநிலம் முழுவதும் மதுபான கடைகள் ஒழிக்கப்படும் என பெண்களை நம்ப வைத்து ஆட்சிக்கு வந்தது. 

ஆனால் தற்போது வரை மதுபான கடைகளுக்கு தடை விதிக்கவில்லை. இதன் மூலம் அவர்கள் ரூ. 2000 கோடி வரை ஊழல் செய்துள்ளனர்'' என விமர்சித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

 trusting women cheated Congress party Minister accused


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->