தண்டவாளத்தில் காஸ் சிலிண்டர் வைத்து ரயிலை கவிழ்க்க முயற்சி! - Seithipunal
Seithipunal


ரயிலை கவிழ்க்கும் முயற்சி கடந்த மூன்று மாதங்களில் அதிகரித்து வருவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரயிலை கவிழ்ப்பதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தற்போது வரை 18 முறை ரயிலை கவிழ்க்க முயற்சிகள் நடந்துள்ள நிலையில், அதற்காக ரயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் காஸ் சிலிண்டர்கள், சைக்கிள்கள், இரும்பு கம்பிகள் மற்றும் சிமென்ட் பலகைகள் வைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரயிலை கவழ்க்க ஆகஸ்ட் மாதம் 15 முறையும், செப்டம்பர் மாதம் 3 முறையும் முயற்சிகள் நடந்துள்ளது, இந்நிலையில், ரயிலை கவழ்க்க உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தான் அதிகம் என தெரியவந்துள்ளது. மேலும், உத்தரப் பிரதேசத்தை அடுத்த இடங்களில் பஞ்சாப், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மத்திய பிரதேஷ், ஒடிசா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் உள்ளன.

சபர்மதி ரயில் கடந்த ஆகஸ்ட்  மாதம், கான்பூர் அருகே உள்ள தண்டவாளத்தின் மீது வைக்கப்பட்ட பொருளின் மீது மோதியதால் 20 பெட்டிகள் தடம்புரண்டன. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் கான்பூரில் தண்டவாளத்தில் ரயிலை கவிழ்க்க காஸ் சிலிண்டர் வைக்கப்பட்டு முயற்சி நடந்ததுள்ளது. ஆனால், ரயில் ஓட்டுநர் முன்னரே, அறிந்ததால் துல்லியமாக செயல்பட்டு ரயிலை நிறுத்தினார். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 6 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Try to overturn the train by placing a gas cylinder on the tracks


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->