பெற்றோர்களே கவனமாக இருங்க.. LED டிவி வெடித்து 16 வயது இளைஞர் பலி.! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம் மாநிலத்தில் LED டிவி வெடித்து 16 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் தற்போது நவீன தொழில்நுட்பங்கள் மூலம் முன்னேறி வருகிறது. இந்த நவீன தொழில்நுட்பங்கள் மனிதர்களுக்கு நிறைய நன்மைகள் செய்தாலும், அதே அளவிற்கு தீங்கும் விளைவிக்கின்றன.

அந்த வகையில் உத்திரபிரதேசம் மாநிலத்தில் காசியாபாத்தில் LED டிவி வெடித்ததில் 16 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் அவருடன் வீட்டில் இருந்த தாய், தங்கை மற்றும் அவருடைய நண்பர் ஆகிய மூவரும் காயமடைந்துள்ளனர். 

வீட்டின் சுவற்றில் மாற்றப்பட்டிருந்த டிவி வெடித்ததில் வீடு அதிர்ந்து வீட்டின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. டிவி வெடித்த சத்தத்தை கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இதுவரை நாம் செல்போன் வெடித்து தான் பார்த்திருக்கின்றோம். தற்போது டிவி வெடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tv blast in uttarpradesh 16years old boy death 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->