பிரதமர் மோடிக்கு த.வெ.க தலைவர் விஜய் வாழ்த்து! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றதையடுத்து, பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு ஆட்சியமைக்க ஜனாதிபதியிடம் உரிமை கோரப்பட்டது. 

இதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு பிரதமர் மோடியை ஆட்சியமைக்குமாறு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில் மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்றார். 

அவருக்கு ஜனாதிபதி முர்மு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து 72 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்த நிலையில், பிரதமராக பதவியேற்ற மோடிக்கு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ளதாவது:- "பிரதமராகத் தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பதவியேற்றுள்ள மோடிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tvk leader vijay wish to pm modi inauguration


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->