அடுத்தடுத்த தோல்வி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி நிலை என்ன?! அடுத்து என்ன?!  - Seithipunal
Seithipunal


நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று முடிந்துள்ளது. முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் தொடரிலும் தற்போது தோல்வியை தழுவியுள்ளது. இதன் மூலம் டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி இரண்டு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது. 

இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தை பொறுத்தவரை, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணி 156 ரங்களுக்கு அனைத்து விக்கட்டையும் இழந்து அதிர்ச்சி கொடுத்தது.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி 255 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி வெற்றி பெற 359 ரகளை இலக்காக நியூசிலாந்து அணி நிர்ணயித்தது.

அதன்படி களமிறங்கிய இந்திய அணி 245 ரன்கள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியை சந்தித்துள்ளது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. 

நியூசிலாந்துக்கு எதிரான இரு ஆட்டங்களிலும் இந்திய அணி தோல்வியடைந்த போதிலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

62.82 சதவிகித வெற்றிகளுடன் தரவரிசையில் முதலிடத்தில் இந்திய அணி உள்ளது. 
இரண்டாவது இடத்தில் 62.50 சதவிகித வெற்றிகளுடன் ஆஸ்திரேலியா அணி உள்ளது.

மூன்றாவது இடத்தில் 55.56 சதவிகித வெற்றிகளுடன் இலங்கை அணி உள்ளது.
நான்காவது இடத்தில் 50.00 சதவிகித வெற்றிகளுடன் நியூசிலாந்து அணி உள்ளது.
ஐந்தாவது இடத்தில் 47.62 சதவிகித வெற்றிகளுடன் தென்னாப்பிரிக்க அணி உள்ளது. 6,7,8 மற்றும் 9-வது இடங்களில் இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் உள்ளன.

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்படும்.

மேலும், இந்திய அணி ஆடவுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் 5 ஆட்டங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. மீதமுள்ள இந்த 6 ஆட்டங்களில் இந்திய அணி 4 வெற்றிகளை பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND in WC Test Champ Rank


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->