சத்தீஸ்கரில் பயங்கரம் - திருமண விழாவில் திராவகம் வீசியதால் மணமக்கள் உள்பட 12 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


சத்தீஸ்கரில் பயங்கரம் - திருமண விழாவில் திராவகம் வீசியதால் மணமக்கள் உள்பட 12 பேர் படுகாயம்.!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தார் மாவட்டம், ஜோட் அம்பால் கிராமத்தில் ஒரு வீட்டில் திருமண விழா நடைபெற்றது. அப்போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த நேரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திய மர்ம நபர் ஒருவர் விழாவில் திராவகம் போன்ற பொருளை வீசியுள்ளனர்.

இதில், மணமக்கள் மற்றும் உறவினர்கள் உள்பட மொத்தம் பன்னிரண்டு பேர் உடல் கருகி படுகாயமடைந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திராவகம் வீசியதில் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதையடுத்து போலீசார் சம்பவ தொடர்பாக வழக்கு பதிவு செய்து திருமண விழாவில் திராவகம் வீசிய நபர் யார்? அவர் எதற்காக திராவகம் வீசினார்? என்று பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமண விழாவில் திராவகம் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த திருமண விழாவில் அந்த பகுதி எம்.எல்.ஏ.வும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

twelve peoples addmitted hospital for thrashing on wedding ceremony in chateesgarh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->