மகாராஷ்டிரா : ஓடும் பேருந்தில் திடீர் தீ விபத்து - 25 பயணிகள் சடலமாக மீட்பு.!
twenty five peoples died for bus fire accident in maharastra
மகாராஷ்டிரா : ஓடும் பேருந்தில் திடீர் தீ விபத்து - 25 பயணிகள் சடலமாக மீட்பு.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள யவத்மால் பகுதியில் இருந்து புனே நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து சம்ருத்தி மகாமார்க் விரைவுச் சாலை அருகே புல்தானா பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.
அதிகாலையில் நடந்த இந்த கோர விபத்தில் சிக்கி இருபத்தைந்து பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதுவரைக்கும் பேருந்தில் இருந்து 25 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆறிலிருந்து எட்டு பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் புல்தானா சிவில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஓடும் பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்ன? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
twenty five peoples died for bus fire accident in maharastra