அரசு ஊழியர்களுக்கு 2 நாட்கள் விடுமுறை.! முதலமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கடந்த 2021 ஆம் ஆண்டு பதவியேற்ற பிறகு அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அரசு ஊழியர்கள் தங்கள் பெற்றோர் மற்றும் மாமியார்களுடன் நேரத்தை செலவிட இரண்டு சிறப்பு சாதாரண விடுப்புகளை அறிவித்தார். அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் இந்த சிறப்பு விடுமுறை ஆனது அறிவிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், இந்த ஆண்டு வரும் நவம்பர் 6 மற்றும் 8 உள்ளிட்ட தேதிகளில் சிறப்பு விடுப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தனது எக்ஸ் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

"தங்கள் பெற்றோர் மற்றும் தனது வாழ்க்கைத் துணைவரின் பெற்றோருடன் நேரத்தை செலவழிக்க ஏதுவாக, மாநில அரசு ஊழியர்களுக்கு 2 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்படும். அதேநேரம், இந்த விடுப்பை வயதான பெற்றோருடன் நேரத்தை செலவழிக்கவும், அவர்களை கவனித்துக் கொள்ளவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மேலும் இந்த விடுமுறையை தனிப்பட்ட கொண்டாட்டங்களுக்காக பயன்படுத்தக் கூடாது. வரும் நவம்பர் 6 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சிறப்பு விடுப்பு வழங்கப்படும். இதற்கு நடுவே, 7-ம் தேதி சத் பூஜை, 9-ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை, 10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களாக உள்ளன. ஆகவே, அரசு ஊழியர்கள் தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் பெற்றோருடன் செலவிட வேண்டும் என்று  தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two days holiday to government employees in assam


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->