2 டெல்லி விமானங்க ரத்து - இதுதான் காரணமா? - Seithipunal
Seithipunal


போதிய பயணிகள் இல்லாததால் டெல்லியில் இருந்து வர இருந்த இரண்டு விமானங்கள் ரத்தட்டு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தலைநகர் டெல்லியில் இருந்து இன்று காலை 7.50 மணிக்கு புறப்பட்டு காலை 10.45 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையம் வர வேண்டிய விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், காலை 11.25 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 2.20 மணிக்கு டெல்லிக்கு சென்றடைய வேண்டிய விஸ்வரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் இன்று திடீரென ரத்து செய்யப்பட்டன.

மேலும் இந்த விமானங்களில் பயணிக்க முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வேறு விமானங்களுக்கு டிக்கெட்டுகள் மாற்றப்பட்டன. இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- 

'போதிய பயணிகள் இல்லாததால் நிர்வாக காரணங்களுக்காக இந்த இரண்டு விமான சேவைகளும், இன்று ரத்து செய்யப்பட்டது. பயணிகளுக்கு தேவையான மாற்று ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவித்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two delhi flights cancelled for no more passangers


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->