இரண்டாவது இடத்தில் துரைமுருகன், மூன்றாவது இடத்தில் உதயநிதி! அமைச்சரவை பட்டியல் வெளியீடு! - Seithipunal
Seithipunal


தமிழக அமைச்சரவில் அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில், தற்போது தமிழக அமைச்சரவையின் வரிசை பட்டியல் வெளியாகி உள்ளது அதன்படி, 

முதல் இடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் இரண்டாவது இடத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும் இடம்பெற்றுள்ளனர்.

துணை முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலின் மூன்றாவது இடம் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையில் நான்காவது இடத்தில் கே.என்.நேரு,

ஐந்தாவது இடத்தில் ஐ.பெரியசாமி,

ஆறாவது இடத்தில் பொன்முடி

ஏழாவது இடத்தில் எ.வ.வேலு இடம்பெற்றுள்ளார். 

அடுத்தடுத்த இடங்களில் முறையே எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் 15 மாதங்களாக சிறையில் இருந்து நிபந்தனை ஜாமின் உடன் வெளியே வந்து அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் செந்தில் பாலாஜிக்கு 21-வது இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் திமுக ஆட்சி அமைந்த உடன் முக்கிய அமைச்சராக கருதப்பட்ட டி,.ஆர்.பி.ராஜாவுக்கு 33 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 

இந்த அமைச்சரவை பட்டியலில் முதல் 10 இடங்களில் பட்டியல் இனத்தை சேர்ந்த எந்த அமைச்சரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழக அமைச்சரவையில் முதல் ஐந்து இடங்களில் பட்டியல் இனத்தை சேர்ந்த அமைச்சர் எப்போது இடம் பெறுகிறாரோ, அப்போதுதான் தமிழக அமைச்சரவையில் சமூக நீதி நிலை நாட்டப்பட்டதாக கருதப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu MK Stalin cabinet rank report report


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->