நடிகர் ஜெயம் ரவியுடன் வாழ விரும்புகிறேன் - மனைவி ஆர்த்தி பரபரப்பு அறிக்கை! - Seithipunal
Seithipunal


நடிகர் ஜெயம் ரவியுடன் வாழ விரும்புகிறேன் என்று, அவரின் மனைவி ஆர்த்தி ரவி தெரிவித்துள்ளார்.

இது குறித்த வரின் அறிக்கையில், “என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழும் கருத்துகள் மீதான என்னுடைய மவுனத்தின் வெளிப்பாடு, பலவீனமோ, குற்ற உணர்ச்சியோ அல்ல என்பதை தெளிவுபடுத்துகிறேன். கண்ணியத்தை கடைபிடிக்கும் வகையிலும், உண்மையை மறைக்க என்னை மோசமாக சித்தரிக்க முயற்சிப்பவர்களுக்கு பதிலளிப்பதை தவிர்க்கவும், மவுனம் காக்கிறேன். அதே நேரம் நீதித் துறையால் எனக்கான நீதி கிடைக்கும் என நம்புகிறேன்.

பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையில் விவாகரத்து பெற்றதாக வெளியான அறிவிப்பை கண்டு அதிர்ச்சி அடைந்து, ஒரு தலைபட்சமாக இது நடக்கிறது என்பதை வெளிப்படுத்தினேன். இந்த விஷயத்தில் தனிப்பட்ட உரையாடலை நான் எதிர்பார்க்கிறேன். ஆனால், இன்று வரை அது மறுக்கப்படுகிறது. திருமணம் எனும் புனிதத்தை ஆழமாக மதிக்கிறேன். யாருடைய நற்பெயரையும் புண்படுத்தும் விதமாக பொது விவாதங்களில் ஈடுபட மாட்டேன். என் குடும்பத்தின் நலன் குறித்தே என் முழு கவனமும் உள்ளது. கடவுள் நல்வழிகாட்டுவார் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jayam Ravi Wife Arthi Statement


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->