தீராத கடன் பிரச்சனை - அல்வாவில் காத்திருந்த அதிர்ச்சி.! இருவர் பலி.! - Seithipunal
Seithipunal


தீராத கடன் பிரச்சனை - அல்வாவில் காத்திருந்த அதிர்ச்சி.! இருவர் பலி.!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரில் பிரதாப் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் சர்மா. முப்பது வயதுடைய இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். 

இந்த நிலையில் இவருக்கு தீராத கடன் பிரச்சனை மற்றும் குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக நேற்று அவர், அல்வாவில் விஷம் கலந்து குடும்பத்தினருக்கு கொடுத்து விட்டு பின்பு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

இதையறிந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை செய்தனர். 

அதில், சர்மாவின் மனைவி சாக்ஷி, மற்றும் மகன் அதர்வ் உள்ளிட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக  உயிரிழந்தது தெரியவந்தது. மேலும், சர்மாவும் அவரது மகள் நியாவும் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளனர்.

உடனே போலீசார் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two peoples died and two peoples injured for loan problam in rajasthan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->