உத்ரகாண்டில் பரபரப்பு - புலிக்கு இரையாகும் பொதுமக்கள்.! கிராமங்களில் ஊரடங்கு உத்தரவு.! - Seithipunal
Seithipunal


உத்ரகாண்டில் பரபரப்பு - புலிக்கு இரையாகும் பொதுமக்கள்.! கிராமங்களில் ஊரடங்கு உத்தரவு.!

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கார்பெட் புலிகள் காப்பகத்திற்கு அருகே உள்ள சிம்லி கிராமத்தைச் சேர்ந்தவர் ரன்வீர் சிங் நேகி. தனியாக வசித்து வந்த இவரை கடந்த சனிக்கிழமை முதல் அவரது உறவினர்கள் ரன்வீர் சின் நேகியை தொலைபேசியில் அழைத்துள்ளனர். ஆனால், அவர் எடுக்கவில்லை. 

இதனால், சந்தேகமடைந்த அவரது உறவினர்கள், அக்கம்பக்கத்தினரிடம் ரன்வீர் சிங் வீட்டுக்குச் சென்று பரிசோதனை செய்யுமாறு வலியுறுத்தினர். அதன் படி அக்கம் பக்கத்தினர் ரன்வீர் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது வழியில் ரத்தக் கறைகள் இருந்துள்ளது.

இதையடுத்து கிராம மக்கள் அவரை நீண்ட நேரமாகத் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், நேற்று ரன்வீர் சிங் புலியால் பாதி உண்ணப்பட்ட அரைகுறையான உடலுடன் மீட்கப்பட்டுள்ளார். கடந்த மூன்று நாட்களில் அப்பகுதியில் நடந்த இரண்டாவது சம்பவம் இதுவாகும். 

இதற்கு முன்னதாக, டல்லா கிராமத்தில் கடந்த 13ம் தேதி வயலில் கோதுமை அறுவடை செய்யச் சென்றிருந்த பிரேந்திர சிங் என்பவர் புலியால் அடித்துக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக வனக்காப்பாளர்கள் புலி தாக்குதலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். 

புலியை பிடிக்க கிராமங்களில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. அதனால், பொதுமக்கள் கால்நடைகளுக்கு தீவனம் கொண்டு வருவதற்கு வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம். 

தற்போது மக்களின் வீட்டு வாசலில் கால்நடைத் தீவனம் கிடைப்பதற்கு ஆவணம் செய்ய வேண்டும் என்று கால்நடை பராமரிப்புத் துறையிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 25 கிராமங்களில் ஊரடங்கு உத்தரவும், பள்ளிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது என்றுத் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two peoples died for tiger attack in uttarkand


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->