இதுவரைக்கும் ரூ.2.41 லட்சம் கோடி 2000 நோட்டுகள் வாபஸ் - ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்.!!
two point forty one lakhs crores 2000 notes withdraw reserve bank governor info
இதுவரைக்கும் ரூ.2.41 லட்சம் கோடி 2000 நோட்டுகள் வாபஸ் - ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்.!!
இந்தியாவில் கடந்த மே மாதம் 19-ம் தேதி 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி திடீரென அறிவித்தது. அதிலிருந்து பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றி வருகின்றனர்.
கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதி வரை புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளில் சுமார் 50 சதவீதம் மதிப்புள்ள நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்ப வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக அவர் கடந்த வாரம் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, "மார்ச் 31 வரையிலான கணக்கீட்டின்படி ரூ.3.62 லட்சம் கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. ஆனால், 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் மூன்றில் இரண்டு பங்கு 2,000 நோட்டுகள் வங்கிகளில் செலுத்தப்பட்டு விட்டன.
அதாவது, புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளில் ரூ.2.41 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி வந்துவிட்டன. இதில், 85 சதவீதம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை ஏனைய கரன்சிகளாக மாற்றிக் கொள்ளப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
English Summary
two point forty one lakhs crores 2000 notes withdraw reserve bank governor info