ஆசிய கோப்பை ஹாக்கி தொடருக்கான இந்திய அணிக்கு இரண்டு தமிழக வீரர்கள் தேர்வு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தைச் சேர்ந்த மாரீஸ்வரன், கார்த்திக் ஆகியோர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடருக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் வரும் 23 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெற உள்ளன.

இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரூபிந்தர் பால் சிங் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள அணியில் தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.மாரீஸ்வரன் மற்றும் எஸ்.கார்த்திக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சிறப்பு விளையாட்டு மைய விடுதியைச் சேர்ந்த வீரர்களான மாரீஸ்வரன் மற்றும் கார்த்திக் ஆகியோர்,

இந்திய ஜூனியர் மற்றும் சீனியர் அணியில் கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு போட்டிகளில் விளையாடி உள்ளனர்.

ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியில் முதல் முன்று இடங்களை பிடிக்கும் அணிகள், உலக கோப்பை ஹாக்கி போட்டித் தொடருக்கு நேரடியாகவே தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Two tamilnadu players selected in Asian hockey cup


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->