2050ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் 3700 அணைகளின் நிலை? - ஐநா எச்சரிக்கை - Seithipunal
Seithipunal


எதிர்கால நீர்த்தேக்கம், நீர் தேவை, சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் சுகாதார மைய பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் உலக அளவில் இருக்கும் அணைகளின் எதிர்காலம் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் முடிவில், நீர்த்தேக்கங்களில் ஏற்படும் வண்டல் மண் படிவால் உலக அளவில் சுமார் 50,000 மிகப்பெரிய அணைகள் தங்களது நீர் சேமிப்பு திறனை 13 முதல் 19% வரை இழந்துள்ளது. இதையடுத்து 2050ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள 3,700 அணைகள் வண்டல் மண் படிவால் தங்களது மொத்த சேமிப்பில் 26 சதவீதத்தை இழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 2015ஆம் ஆண்டு இந்தியாவின் மத்திய நீர் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியா முழுவதும் 141 பழமையான மற்றும் மிகப்பெரிய அணைகள் தங்களது நீர் சேமிப்பு திறனை 30% இழக்கும் என தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பொதுவாக பெரிய அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் சுற்றுச்சூழலுக்கு அவசியமானதாக விளங்குகிறது. மேலும் நீர்மின்சாரம், வெள்ளக் கட்டுப்பாடு, நீர்ப்பாசனம் குடிநீரை வழங்குவது என ஒரே நேரத்தில் பல செயல்பாடுகளைச் செய்கின்றன. தற்பொழுது எதிர்காலத்தில் அணைகளின் நீர்த்தேக்க அளவு குறைவது ஒரே நேரத்தில் அனைத்து செயல்பாடுகளும் பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UN warns that of 3,700 Indian dams will be affected within 2050


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->