கொரோனா காலத்தில் 16 ஆயிரம் பேர் தற்கொலை! மத்திய அரசு தகவல்.!
Unemployment increased during corona
கொரோனா காலத்தில் கடன் சுமையால் 16 ஆயிரம் பேர் இறந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தின் போது வேலையில்லா திண்டாட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் அளித்துள்ள பதிலில்,
கடந்த 2018 -ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வேலையில்லா திண்டாட்டம், கடன் சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதில், தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) வழங்கிய தரவுகளின் அடிப்படையில் 9,140 பேர் வேலையின்மை காரணமாகவும், 16 ஆயிரத்து 91 பேர் கடன் தொல்லை காரணமாகவும் இறந்துள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
கொரோனா தொற்று காலத்தின் போது வேலையில்லா காரணத்தால் 2020-ஆம் ஆண்டு அதிகபட்சமாக 3,548 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும், 2018-ஆம் ஆண்டு 2,741 பேரும், 2019-ஆம் ஆண்டு 2,851 பேரும் தற்கொலையா உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.
அன்மையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் நித்யானந்த் ராய், மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்வச் பாரத் மிஷன், ஸ்மார்ட் சிட்டி மிஷன், அனைவருக்கும் வீடு, உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்கள் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.
English Summary
Unemployment increased during corona