ஒரே நாளில்.. அதிரடி காட்டிய மோடி.!! விஸ்வகர்மா திட்டத்திற்கு ரூ.13,000 கோடி ஒதுக்கீடு.!! மத்திய அமைச்சரவையும் ஒப்புதல்.!!
Union Cabinet approves Rs13000 crore for Vishwakarma scheme
இந்தியாவின் 77 வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் நாட்டு மக்களிடம் பேசியவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் குறிப்பாக முத்ரா யோஜனா திட்டத்தால் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. கூடிய விரைவில் பாரம்பரிய திறமைகளை கொண்ட மக்களுக்கு உதவுவதற்காக ரூ.15,000 கோடி மதிப்பில் விஸ்வகர்மா யோஜனா திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.
இந்த அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்துக்கு ரூ.13,000 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 18 வகையான பாரம்பரிய தொழில் மற்றும் கைவினை தொழில்களுக்கான நிதி ஆதாரம் வழங்கப்படும். குறிப்பாக தச்சர், கட்டிட தொழிலாளர்கள், காலணி உற்பத்தியாளர், நெசவாளர்கள், நகை வடிவமைப்பாளர்கள், கருவிகள் செய்பவர்கள், துணி துவைப்பவர்கள், முடி திருத்தம் செய்வோர், மீன் வலை நெய்பவர்கள் என பாரம்பரிய சுயதொழில் மற்றும் கைவினைத் தொழில் செய்யக்கூடிய சுமார் 30 லட்சம் பேர் பலனடைய வாய்ப்புள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.
English Summary
Union Cabinet approves Rs13000 crore for Vishwakarma scheme