வேலூர் || அரசு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் - மின்சாரம் தாக்கி பலி.! - Seithipunal
Seithipunal


வேலுார் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு அடுத்த வேப்பங்குப்பம் அருகே ரங்கப்பன் கொட்டாய் பகுதியில், பஞ்சாயத்து சார்பில் மின் விளக்கு அமைக்க இரும்பால் ஆன மின்கம்பம் நடும் பணி நடைபெற்றது.

இந்தப் பணியில், வேப்பங்குப்பம் பம்ப் ஆப்பரேட்டர் முத்துக்குமரன் மற்றும் அப்பகுதியை சேர்ந்த தொழிலாளி அசோக்குமார், உள்ளிட்டோர் ஈடுபட்டனர். அப்போது இருவரும் இரும்பு மின் கம்பத்தை துாக்கி நிறுத்தும்போது, மின் கம்பம் தடுமாறி பக்கத்தில் சென்ற மின் கம்பி மீது உரசியது. 

இதனால், மின்சாரம் தாக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். 

பின்னர் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்து பல மணி நேரம் ஆகியும் சடலத்தை எடுத்து எல்ல ஆம்புலன்ஸ் வராததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two workers died for electric shock attack in vellore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->