மாநில நிதியமைச்சர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தீவிர ஆலோசனை.! - Seithipunal
Seithipunal


அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச நிதி அமைச்சர்களுடன் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 

2024-25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பாக மாநில அரசுகளின் ஆலோசனைகளையும் கருத்துகளையும் இன்று நடைபெற்ற கூட்டத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டறிந்தார். 

மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்ற பின் அவரது தலைமையில் மாநில நிதி அமைச்சர்களுடன் நடைபெறும் முதல் ஆலோசனைக் கூட்டம் இதுதான். 

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார். இந்த கூட்டத்தை தொடர்ந்து ஜிஎஸ்டி கவுன்சிலின் 53 வது ஆலோசனைக் கூட்டமும் நடைபெற உள்ளது. 

முன்னதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 19ஆம் தேதி பொருளாதார நிபுணர்கள், முதலீட்டாளர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Union Finance Minister Nirmala Sitharaman consultation with state finance ministers


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->