ஆயுதங்களை கைவிட்டு சரணடையுங்கள் இல்லையென்றால்.. நக்ஸலைட்டுகளுக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அமைச்சர்.! - Seithipunal
Seithipunal


சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள ஜக்டல்பூர் மாவட்டத்தில் மாநில விளையாட்டுத்துறை சார்பில் பேஸ்டர் ஒலிம்பிக்ஸ் என்ற பெயரில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதன் நிறைவு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- "ஆயுதங்களை கைவிட்டு , சரணடைந்து பொது நீரோட்டத்தில் இணையும்படி நக்சலைட்டுகளுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். 

உங்கள் மறுவாழ்வுக்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம். சரணடையும்படி விடுத்த வேண்டுகோளை ஏற்க மறுத்தால் பாதுகாப்புப் படையினரால் நக்சலைட்டுகள் கடுமையாக தாக்கப்படுவார்கள்.

வருகின்ற 2026 மார்ச் 31ம் தேதிக்குள் நக்சலைட்டுகள் இல்லாத இந்தியா என்ற பிரதமர் மோடியின் இலக்கை முழுமையாக நிறைவேற்ற சத்தீஷ்கர் போலீசார் உறுதிபூண்டுள்ளனர். நக்சலைட்டுகள் ஆயுதங்களை கைவிட்டு பொதுநீரோட்டத்தில் இணைந்தால் நீங்கள் சத்தீஷ்கர், இந்தியாவின் வளர்ச்சிக்கு பங்களிப்பீர்கள்' என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

union minister amitsha warning to naxalites


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->