சீட்டிங் செய்த எலான் மஸ்க் ..உடனடியாக வெளியேற்றிய பிரபல நிறுவனம்! - Seithipunal
Seithipunal


பாத் ஆஃப் எக்ஸைல் 2 வீடியோ கேம் விளையாடியதில் சீட்டிங் செய்ததாக கூறி உலக பணக்காரரான எலான் மஸ்க் அவ்விளையாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் கடந்த சில ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. டொனால்டு டிரம்பிற்கு ஆதரவாக மஸ்க் பிரசாரம் செய்த நிலையில், அவருக்கு டிரம்ப் நிர்வாகத்திலும் முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற காரணங்களால் எலான் மஸ்க் நிறுவனத்திற்கு சொந்தமான பங்குகள் விலையேற்றத்தை சந்தித்தன. இதனால், உலக வரலாற்றில் யாரும் தொட்டிராத சொத்து மதிப்பை கடந்த மாத இறுதியில் எலான் மஸ்க் தொட்டு இருந்தார். ரூ.29 லட்சம் கோடியாக எலான் மஸ்க் சொத்து மதிப்பு உயர்ந்த நிலையில், தற்போது அவரது சொத்து மதிப்பு ரூ.33 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அமெரிக்க மதிப்பில் சுமார் 400 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

இப்படி உலக பணக்காரரான எலான் மஸ்க் டையப்லோ IV என்ற என்ற வீடியோ கேமை விளையாடி வந்தார். இந்த விளையாட்டின் லீடர்போர்டில் எலான் மஸ்க் முதலிடத்திற்கு முன்னேறினார். இதன்பிறகு அவர் பாத் ஆஃப் எக்ஸைல் 2 வீடியோ கேமை விளையாடி வந்தார்.

இந்நிலையில், பாத் ஆஃப் எக்ஸைல் 2 வீடியோ கேம் விளையாடியதில் சீட்டிங் செய்ததாக கூறி உலக பணக்காரரான எலான் மஸ்க் அவ்விளையாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

'மிக வேகமாக பல செயல்களைச் செய்ததற்காக நீங்கள் வெளியேற்றப்பட்டீர்கள்"'என்ற அந்த வீடியோ கேமின் ஸ்க்ரீன்சாட்டை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள மஸ்க், "சிறிய அளவில் கூட அதை நான் செய்யவில்லை" என்று கிண்டலாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Elon Musk The famous company that was immediately expelled


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->