தீயாய் பரவும் கொரோனா..!! மீண்டும் மினி லாக் டவுன்? மத்திய, மாநில அமைச்சர்கள் நாளை ஆலோசனை..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில் தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 25, 000-த்தை கடந்துள்ளது. அதேபோன்று கொரோனா பாதிப்பால் ஏற்படும் மரணங்களும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூர் மாண்டவியா நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நிலையில் பொது இடங்களில் பொதுமக்கள் முக கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நாளை மத்திய அமைச்சர் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் கூடுதல் கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வெளியிட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அறிவிப்பின் பொழுது கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் சொந்த வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள் என தெரிய வந்துள்ளது. இந்தியாவில் 25 ஆயிரத்து 587 பேர் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தொற்றில் இருந்து குணமான விகிதம் 98.75 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தை பொருத்தவரை 2,826 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். எனவே நாளை மத்திய அமைச்சரின் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Union Minister consults with State Health Ministers amid corona virus spreading


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->